எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் சந்திப்பு
சென்னை: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேசினார். காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேசினார். அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் தெய்வசிகாமணி உள்ளிட்டோர் உதயநிதியை சந்தித்தனர்.
காவிரி, மேகதாது விவகாரங்கள் தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் உதயநிதி ஆலோசனை நடத்தினார். பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம் குறித்தும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் உதயநிதி ஆலோசனை நடத்தினார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளுடன் உதயநிதி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்