மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு
சென்னை: எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார். அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டில் தரவரிசை பட்டியல் வெளியீடு செய்யப்பட்டது. விழுப்புரத்தைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் என்ற மாணவர் முதலிடமும், 7.5% ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த மாணவர்கள் தரவரிசையில் நாகையைச் சேர்ந்த தினேஷ் என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளனர்.