தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
சென்னை: அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் விஜய் கொண்டுவந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.12) தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை கொண்டு வந்து உரையாற்றினார். இதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் காரசார விவாதம் நடத்தினார்கள்.
“தொகுதி மறுவரையறையில் எக்காரணம் கொண்டும் தமிழகம் பாதிக்கப்படக் கூடாது என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு. திமுகவை பொறுத்தவரை பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக ஆதரிக்கிறோம்” என சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்
பின்னர், “நாடாளுமன்றத்தில் தொகுதிமறுவரையறை மசோதா தாக்கல் செய்வதற்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், அரசியல் காரணங்களுக்காக பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தவெக அரசு அவசர அவசரமாக தனி தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. தொகுதி மறுவரையறை தமிழகத்துக்கு சாதகமாக உள்ளதா? பாதகமாக உள்ளதா? எனத் தெரியாமல் அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தை அதிமுக எதிர்க்கிறது.
அரசியல் காரணங்களுக்காக தவெக அரசு இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது; அதிமுக இதை நிராகரிக்கிறது,” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, “தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவுக்கு ஒன்றிய அரசு சட்ட முன்வடிவு கொண்டு வராத நிலையில், எதன் அடிப்படையில் தனித்தீர்மானம் சரியாக இருக்கும்,” என தேதிமுக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.
அதிமுக, பாஜக,பாமக ஆகிய கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல்வரின் தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டது. தேமுதிக தனது நிலைப்பாட்டை சரியாக சொல்லவில்லை. தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் “தொகுதி மறுவரையறைக்கு எதிரான