“7.18 சதவீதத்தைக் குறைக்க அனுமதிக்கக் கூடாது” - உதயநிதி!
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை தொடர்பாகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் இன்று (12.08.2026) தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்நிலையில் இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “தொகுதி மறுவரையறை (Delimitation) சட்டத் திருத்தத்திற்கான மசோதாவை ஒன்றிய அரசு மீண்டும் கொண்டுவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், 1971 முதல் 2026 வரை ஃபிரீஸ் (Freeze) செய்யப்பட்டிருக்கக்கூடிய மறுவரையறை நடவடிக்கையை (Delimitation Exercise) மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்