Select Location
All Locations
State
Region
City / District
ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டும் சரிவடைந்து வருகிறதா? - ஓர் அலசல்

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டும் சரிவடைந்து வருகிறதா? - ஓர் அலசல்

ஆஸ்திரேலிய அணி வியாழக்கிழமை டார்வின் நகரில் வங்கதேசத்தை எதிர்கொள்வதன் மூலம், அடுத்த 12 மாதங்களில் 20 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரைத் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கான சுற்றுப்பயணங்கள், நியூசிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணிலான தொடர் மற்றும் 150-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையிலான ஒரு சிறப்பு டெஸ்ட் போட்டி ஆகியவை காத்திருக்கின்றன.

தற்போது புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதால், ‘ஆஷஸ்’ (Ashes) தொடருக்கு முன்னதாகப் போதுமான வெற்றிகளைப் பெற்றால், அட்டவணையில் 21-வது டெஸ்ட் போட்டியும் இணையக்கூடும். அத்துடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்’ இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கலாம். இன்றைய கிரிக்கெட் உலகில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அணியாகத் திகழ்வது ஆஸ்திரேலியாதான் அதில் சந்தேகமில்லை.

ஆனால் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டும் கொஞ்சம் கொஞ்சம் சரிவைக் கண்டு வருகிறது என்பது அங்கு முன்னாள் வீரர்களிடையே கவலைகளை அதிகரித்துள்ளது. காரணம், உள்நாட்டுக் கிரிக்கெட் தொடரான ஷெஃபீல்ட் ஷீல்ட் உலக அரங்கில் சில பல டெஸ்ட் தொடர்களை விடவும் கடினமான கிரிக்கெட் தொடராகும். அதில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆடிய வீரர்கள் வைத்திருந்த சராசரியை இப்போது ஆஸ்திரேலியாவுக்கு ஆடும் வீரர்களின் சராசரியுடன் ஒப்பிட்டால் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டும் சரிவைச் சந்திப்பதை நாம் காண முடியும். மற்ற பெரிய அணிகளான இந்தியா, இங்கிலாந்தை ஒப்பிடும்போது ஆஸ்திரேலியா சொந்த நாட்டில் அவ்வளவாக மண்ணைக் கவ்வுவதில்லை. இந்திய அணியும் சொந்த மண்ணில் தாதாவாக இருந்தது போக இப்போது கடும் உதைகளை வாங்கி வருவதைப் பார்க்கிறோம்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News