Select Location
All Locations
State
Region
City / District
மாணவர் போராட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த தயார் - அமித்ஷா

மாணவர் போராட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த தயார் - அமித்ஷா

டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.

எந்த கேள்விக்கும் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், அரசு விவாதத்திற்குத் தயாராக இருந்தும் எதிர்க்கட்சிகள் அவையைச் செயல்பட விடவில்லை என்றும் அமித் ஷா குறிப்பிட்டார். நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா "'காணாமல் போய்விட்டார்', 'தப்பி ஓடிவிட்டார்', 'தலைமறைவாகி விட்டார்' போன்ற வார்த்தைகளை சமீபகாலமாக நாடாளுமன்றம் மற்றும் பொது வெளியில் எதிர்க்கட்சிகள் அடிக்கடி கூறுகின்றன.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து, நான் தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு வந்து எனது அறையில் தான் அமர்ந்திருக்கிறேன். நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் செயல்பட விடாமல் முடக்கும் நிலையில், அங்கு சென்று நான் என்ன செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.


Dinakaran 1 hour ago
Home Flash News