தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 17 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் சென்னை மற்றும் புறநகரில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே நேற்று சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை பொழிவு காணப்படுகிறது.