Select Location
All Locations
State
Region
City / District
‘ராம் IN லீலா’ ட்ரெய்லர் எப்படி? - அப்பாவி ராமின் காதல் குழப்பம்!

‘ராம் IN லீலா’ ட்ரெய்லர் எப்படி? - அப்பாவி ராமின் காதல் குழப்பம்!

ரியோ ராஜ் நாயகனாக நடித்திருக்கும் ‘ராம் IN லீலா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. ட்ரெய்லரின் தொடக்கத்தில் கல்யாண மாப்பிள்ளையாக என்னென்ன தகுதிகள் வேண்டும் என அனுபவம் பேசுகிறான் இளைஞன் ராம். திருமணத்துக்காக பார்க்கும் பெண்களால் அப்பாவி ராம் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறான். வறண்டு போன அவன் வாழ்வில் வசந்தமாக வருகிறாள் லீலா. ஆனாலும் மாலை 6 மணிக்கு மேல் தன்னை பார்க்கக் கூடாது என அவள் போடும் நிபந்தனையால் தடுமாறும் ராமின் காதல் குழப்பத்தை, கலாட்டாவாக 2.38 நிமிடங்கள் கோர்த்து கலகலப்புக்கான எதிர்பார்ப்பைப் படத்துக்கு தக்க வைத்திருக்கிறது ட்ரெய்லர்.

‘ஆண் பாவம் பொல்லாதது’ படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ரியோ ராஜ் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ராம் IN லீலா’. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஒய்வா எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் வர்திகா ஜெயின் நாயகியாக நடித்துள்ளார். படத்துக்கு மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்ய, அன்கிட் மேனன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகிறது.


Hindu Tamil 13 days ago
Home Flash News