Select Location
All Locations
State
Region
City / District
பிளாக்பஸ்டர் உறுதி! பாராட்டுகளைப் பெறும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்!

பிளாக்பஸ்டர் உறுதி! பாராட்டுகளைப் பெறும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்!

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கான காட்சியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் நாளை (ஆக. 14) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் முதல் நாளுக்கான டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

நீண்ட காலம் கழித்து சூர்யா நடிப்பில் வெளியாகும் முழுநீளக் காதல், குடும்பத் திரைப்படம் என்பதால் அவரின் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் விநியோகிஸ்தர்களுக்கான சிறப்புக் காட்சியைக் கண்டவர்கள், கண்டிப்பாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆகும் எனப் பதிவிட்டு வருகின்றனர். கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து இப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றால் சூர்யாவின் வணிகமும் பெரிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Hindu Tamil 47 minutes ago
Home Flash News