Select Location
All Locations
State
Region
City / District
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் X Review!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் X Review!

Viswanath And Sons X Review : சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் குறித்த எக்ஸ் ரிவ்யூ வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Viswanath And Sons X Review : வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம், விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கிறது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள், அதற்கு கொடுத்துள்ள விமர்சனம் என்ன என்பதைப்பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

40களில் இருக்கும் ஆண் மீது, 20களில் இருக்கும் பெண்ணிற்கு காதல் வருவதும், அந்த ஆண் தொடர்ந்து அந்த காதலை மறுத்து, கடைசியில் மனம் திருந்துகிறாரா இல்லையா என்பதுதான் கதை. இதில் ஹீரோவாகவும், ஒரு குழந்தைக்கு தந்தையாகவும் சூர்யா நடித்துள்ளார். மமிதா பைஜு, மேடி எனும் கேரக்டரில் க்யூட் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் பலர் இது குறித்து தங்களின் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

முதல்பாதி சூப்பர்..இரண்டாம் பாதி சுமார்! விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை பார்த்த ஒரு ரசிகர், முதல் பாதி நன்றாக இருந்ததாகவும், இரண்டாம் பாதி வீக் ஆக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். படம் ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக நகர்ந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், போகப்போக கொஞ்சம் எமோஷன் மற்றும் நகைச்சுவை கலந்து இருந்ததாக கூறியிருக்கிறார். மேலும், எதிர்ப்பார்ப்பை தூண்டும் இப்படம், ஆங்காங்கே சொதப்பியிருப்பதாகவும் க்ளைமேக்ஸை இன்னும் கொஞ்சம் நன்றாக கையாண்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

சூர்யா, மமிதா, ராதிகா நல்ல பர்ஃபாமென்ஸ் கொடுத்திருப்பதாகவும், படத்தில் வசனங்கள் பெரிய பலம் எனவும் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் இது குடும்பத்தினருக்கு ஏற்ற நல்ல படம் என கூறியிருக்கிறார்.


Zee News Tamil 52 minutes ago
Home Flash News