Select Location
All Locations
State
Region
City / District
“தேசிய உணர்வை மேலும் வலுப்படுத்துவோம்”

“தேசிய உணர்வை மேலும் வலுப்படுத்துவோம்” - பிரிவினை துயரம் நினைவு நாளில் பிரதமர் வேண்டுகோள்

புதுடெல்லி: நல்லெண்ணம் மற்றும் ஒற்றுமை எனும் தேசிய உணர்வை நாம் மேலும் வலுப்படுத்துவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையால் நிகழ்ந்த துயரங்களை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 14-ம் நாள், பிரிவினை துயரம் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு ஒன்றில், “நாம் இன்று பிரிவினைத் துயரம் நினைவு நாளை அனுசரிக்கிறோம். பிரிவினையால் பாதிக்கப்பட்ட அனைவரின் மன உறுதியையும் நாம் நினைவுகூர்கிறோம். அது வரலாற்றில் பலரது வாழ்க்கையைச் சிதைத்த ஒரு தருணமாக இருந்தது, குடும்பங்கள் வேரறுக்கப்பட்டன, அன்புக்குரியவர்களை பலர் இழந்தனர், அளப்பரிய துயரங்கள் அனுபவிக்கப்பட்டன.

அதே வேளையில், அந்த சூழலைக் கடந்து மக்கள் ஒன்றுமில்லாத நிலையில் இருந்து தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்தனர். இடர்களை வெற்றிகரமாக மாற்றினர். நாட்டின் முன்னேற்றத்துக்குப் பெரும் பங்களிப்பை வழங்கினர். அவர்களின் வாழ்க்கைப் பயணம் மனித மனதின் வலிமையை நமக்கு நினைவூட்டுகிறது. இந்த நாள் நமது நாட்டில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பேணிக்காப்பதற்கான நமது உறுதியை வலுப்படுத்தட்டடும். அத்துடன் வளர்ச்சி அடைந்த இந்தியா எனும் இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.” என்று தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “பிரிவினைத் துயரம் நினைவு நாளில், அந்த பயங்கரமான காலகட்டத்தில் இருந்து மீண்டு வந்து நாட்டின் முன்னேற்றத்துக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கிய நாட்டின் அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த வணக்கங்கள்.

கடினமான சூழலிலும் எவ்வாறு உறுதியான இலக்குகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதை அவர்கள் தங்கள் துணிச்சல் மற்றும் வலிமையின் மூலம் நிரூபித்தனர். நல்லெண்ணம் மற்றும் ஒற்றுமை எனும் தேசிய உணர்வை இந்நாளில் மேலும் வலுப்படுத்துவோம். முயற்சிகள் மூலமே பல்வேறு கலைகள் வெளிப்படுகின்றன. அஞ்சி நடுங்குவோர் மட்டுமே புலம்புவர். நடப்பது நடக்கும்.” என தெரிவித்துள்ளார்.


Hindu Tamil 35 minutes ago
Home Flash News