ஆன்லைன் முன்பதிவிலேயே ரூ. 1 கோடி வசூலித்த கலிஃபா!
நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான கலிஃபா திரைப்படத்தின் டிக்கெட்கள் அதிகளவில் விற்று வருகின்றன. நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான புதிய ஆக்சன் திரைப்படமான கலிஃபா ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஆக. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. டர்போ திரைப்படத்தை இயக்கிய வைசாக் இப்படத்தை இயக்க, ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
தங்கக் கடத்தலைப் பின்னணியாகக் கொண்டு நாயகனுக்கும் கேங்ஸ்டருக்குமான கதையாக உருவான இப்படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், சிறப்பு தோற்றத்தில் நடிகர் மோகன்லாலும் நடித்துள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், இப்படம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவிலேயே ரூ. 1 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிருத்விராஜ் நடிப்பில் இறுதியாக வெளியான விலாயத் புத்தா மற்றும் ஐ, நோபடி ஆகிய திரைப்படங்கள் வணிக வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.