Select Location
All Locations
State
Region
City / District
முதல்வர் விஜய்யின் அலுவலக அறை டெண்டரில் முறைகேடா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில்!

முதல்வர் விஜய்யின் அலுவலக அறை டெண்டரில் முறைகேடா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில்!

முதல்வர் அறை மாற்ற டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவின் குற்றச்சாட்டுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பேசுகையில், முதல்வர் அறை மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அறை மாற்ற டெண்டரில் முறைகேடு எனப் புகார் எழுந்துள்ளது. அறை மாற்றியப் பிறகு டெண்டர் கோரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: ”முன்னாள் அமைச்சர் பேசுகையில் பத்திரிகை செய்தியைக் குறிப்பிட்டு பேசினார். கடந்த 5 ஆண்டுகள் பத்திரிகை செய்திகளை எடுத்து வெளியிட்டால், இந்த துறை (பொதுப்பணித் துறை) ஊழல் மட்டும்தான் செய்திருக்கும் என்று எங்களாலும் சொல்ல முடியும். டெண்டரே இன்னும் முடியவில்லை. பொதுவாக கட்டுமான தொகைக்கு ஏற்ப டெண்டரின் மொத்த மதிப்பை வெளியிடுவார்கள். 3-லிருந்து 7 சதவிகிதம் வரை ஏற்றுவார்கள். ஆனால், நாங்கள் கடந்த ஆண்டு மதிப்பையே கொடுத்துள்ளோம்.


Dinamani 49 minutes ago
Home Flash News