Select Location
All Locations
State
Region
City / District
ரியோ நடிக்கும் ராம் இன் லீலா படத்தின் பெயர் மாற்றம்!

ரியோ நடிக்கும் ராம் இன் லீலா படத்தின் பெயர் மாற்றம்!

ரியோ நடித்துள்ள ராம் இன் லீலா படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோ நடித்துள்ள புதிய படம் ராம் இன் லீலா. இதில், நாயகியாக அறிமுக நடிகை வர்திகா நடித்துள்ளார். அங்கித் மேனன் இசையமைத்துள்ளார்.

ரியோ கடைசியாக நடித்த ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய திரைப்படங்கள் நல்ல வசூலைப் பெற்று வணிக ரீதியாக வெற்றி பெற்றன. இதனால், இப்படத்தின் ஓடிடி உரிமை அமேசான் பிரைம் தளத்திற்கு நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நிலையில் டிரைலரும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் வருகிற ஆக. 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் பெயரை மாற்ற தணிக்கை வாரியம் அறிவுறுத்தியதாகக் கூறப்பட்டது.

ராம் இன் லீலா என்ற பெயர் ஹிந்து மதக் கடவுளைக் குறிக்கும் விதத்தில் இருப்பதாகத் தணிக்கை வாரியம் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், ராம் இன் லீலா என்ற பெயரை ராம் அண்ட் லீலா என பெயர் மாற்றம் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளனர்.


Dinamani 1 hour ago
Home Flash News