Select Location
All Locations
State
Region
City / District
சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகள் நிறைவு;

சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகள் நிறைவு; பலரும் அறிந்திராத விராட் கோலியின் 18 சாதனைகள்!

இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று கொடுத்த விராட் கோலி, இலங்கைக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அறிமுகப் போட்டியில் 12 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அதன் பின் நடந்ததெல்லாம் வரலாறு என்றே கூற வேண்டும்.

இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ள விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற பெருமை விராட் கோலியையேச் சேரும். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 85 சதங்கள் விளாசியுள்ள விராட் கோலி, இன்னும் 15 சதங்கள் விளாசி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை எட்டிப் பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அவரது ரசிகர்களிடத்தில் உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமின்றி, ஐபிஎல் தொடரிலும் விராட் கோலி ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார்.


Dinamani 1 hour ago
Home Flash News