மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் ஆர்ஜே பாலாஜி!
நடிகர் ஆர்ஜே பாலாஜி புதிய திரைப்படமொன்றில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி நடிகர் சூர்யாவை வைத்து இயக்கிய கருப்பு திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். அடுத்ததாக, புதிய திரைப்படமொன்றை இயக்கும் பணிகளில் இருப்பதாகத் தகவல் வெளியானது. மேலும், அப்படத்தில் நடிகர் மணிகண்டன் நடிப்பார் என்றும் கூறப்பட்டது.
ஆனால், ஆர்ஜே பாலாஜி இயக்குநர் பணியிலிருந்து சிறிய ஓய்வை எடுக்க உள்ளதாகவும் இதற்கிடையே இயக்குநர் பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில் புதிய திரைப்படமொன்றில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் பிரசாந்த் முருகேசன் கிடாரி திரைப்படத்தின் இயக்குநர் ஆவார். இறுதியாக, நடிகர் மணிகண்டனை வைத்து மத்தகம் என்கிற இணையத் தொடரை இயக்கி கவனம் பெற்றார்.