Select Location
All Locations
State
Region
City / District
எனது வாழ்க்கையின் பெரிய தூணே அவர் தான்- மனம் திறந்த ஜேசன் சஞ்சய்

எனது வாழ்க்கையின் பெரிய தூணே அவர் தான்- மனம் திறந்த ஜேசன் சஞ்சய்

எனது வாழ்க்கையின் பெரிய தூணே எனது அம்மாதான். 24 மணி நேரமும் என்னை பற்றியும், எனது சகோதரி பற்றியுமே நினைத்துக்கொண்டிருப்பார் என்றார். தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள படம் ‘சிக்மா’. இப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க அவருடன் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் 2-ந்தேதி திரையரங்குகளில்வெளியாக உள்ளது.

இதனிடையே, ஜேசன் சஞ்சய் சமீபத்தில் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- எனது வாழ்க்கையின் பெரிய தூணே எனது அம்மாதான். 24 மணி நேரமும் என்னை பற்றியும், எனது சகோதரி பற்றியுமே நினைத்துக்கொண்டிருப்பார். நான் ஒருநாள் அவருக்கு ஃபோன் செய்ய மறந்துவிட்டால், அவரே எனக்கு ஃபோன் செய்து, 'இன்று என்ன நடந்தது? எப்படி இருக்கிறாய்?' என்றெல்லாம் கேட்டுக்கொண்டே இருப்பார். எனது அப்பா, அம்மாவிடம் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள எனக்கு தயக்கமாகத்தான் இருக்கும். அவர்கள் அந்த அளவுக்கு எனக்கு இடம் கொடுக்கவில்லை. ஆனால் எனது சகோதரியிடம் மட்டும் என்னுடைய எல்லா விஷயங்களையும் மனம் திறந்து பேசுவேன் என்றார்.

மேலும், சென்னையில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? என்ற கேள்விக்கு நண்பர்களுடன் நள்ளிரவில் காரில் பயணம் செய்வது பிடிக்கும் என்றார். பிடித்த உணவு? என்ற கேள்விக்கு பிரியாணி, பரோட்டா என கூறினார்.

மேலும் உங்களுக்கு என்னென்ன மொழிகள் தெரியும்? என்ற கேள்விக்கு எனக்கு ஆங்கிலம் தெரியும், என்னால் தமிழ் பேச முடியும். என் அம்மா இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால், என்னால் ஈழத் தமிழ் பேச முடியும். எனக்கு இந்தி சுத்தமாகத் தெரியாது. தெலுங்கு ஓரளவுக்குப் புரியும், அவ்வளவுதான். ஆக, எனக்கு இரண்டு மொழிகள் மட்டுமே தெரியும் என்றார். ஒருபுறம் எனக்கு நிறைய அன்பு கிடைக்கிறது, அதே சமயம் இயல்பாகவே என் மீது பல எதிர்பார்ப்புகளும் உள்ளன. எனவே, நான் நேர்மறையான கருத்துகளை மட்டுமே எடுத்துக்கொள்வேன். திரையுலகிற்குள் நுழைவது எனக்கு எளிதாக இருந்தது என்பது போன்ற எதிர்மறையான கருத்துகள் வந்தால், அவற்றைப் பற்றிக் கவலைப்பட மாட்டேன். மக்கள் படத்தைப் பார்க்கும்போது, ​​அந்தப் படத்தை மட்டுமே பார்ப்பார்கள். அந்தப் படத்தின் இயக்குனர் யார் என்பதைப் பற்றி அவர்கள் பேசப்போவதில்லை என்றார்.


Malaimalar 1 hour ago
Home Flash News