Select Location
All Locations
State
Region
City / District
Modi | “பள்ளிகளிலேயே விளையாட்டு ஆர்வத்தை கண்டறிய வேண்டும்” - பிரதமர் மோடி

Modi | “பள்ளிகளிலேயே விளையாட்டு ஆர்வத்தை கண்டறிய வேண்டும்” - பிரதமர் மோடி

“2036 ஒலிம்பிக்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த போகும் குழந்தைகளுக்கு தற்போது வயது 5 - 10 இருக்கலாம். அதனால் பள்ளிகளிலேயே அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் மத்திய அரசு செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி துறைகளுக்கான அறிவுறுத்தல்களை வழங்கினார். 

அதன் அடிப்படையில் அமைச்சரவை செயலாளர்கள் மற்ற துறை செயலாளர்களுக்கு விரிவான 23 முக்கிய செயல் திட்ட அறிவுறுத்தல்களை கடிதம் வாயிலாக அனுப்பியுள்ளனர். இதில், விளையாட்டு, திறன் மேம்பாடு, விவசாயம், செயற்கை நுண்ணறிவு, மருந்துத் துறை, அரசு கொள்முதல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளன.


News 18 Tamil Nadu 1 hour ago
Home Flash News