பிரகாஷ் ராஜ் நடித்த ஃபாதர் திரைப்படத்தின் டீசர்!
கும்குமப் பூவும் கொஞ்சுபுறாவும் படத்தின் இயக்குநர் ராஜா மோகன் இயக்கிய ஃபாதர் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் மூலம் , திரையுலகைத் திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் ராஜா மோகன் ஒரு தந்தையின் தியாகத்தை, பெருமையைப் பேசும் திரைப்படமாக ’ஃபாதர்’ படத்தை உருவாக்கி வருகிறார்.
டார்லிங் கிருஷ்ணா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, தந்தையாக நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். ஒரு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான அழகான உறவையும், அப்பாவின் பெருமையையும் அழுத்தமாக பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஆர்சி ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சந்துரு இந்தப் படத்தைப் பெரிய அளவில் தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் நகுல் அப்யங்கர் இசையில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. விரைவில் இப்படம் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இதன் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். இதில் இடம்பெற்ற காட்சிகள், வசனங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.