Select Location
All Locations
State
Region
City / District
``உக்ரைனுக்கு வழங்கிய ராணுவ உதவிகள் செலவை ஐரோப்பிய நாடுகள் வழங்க வேண்டும்" - அதிபர் ட்ரம்ப்

``உக்ரைனுக்கு வழங்கிய ராணுவ உதவிகள் செலவை ஐரோப்பிய நாடுகள் வழங்க வேண்டும்" - அதிபர் ட்ரம்ப்

``உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய இராணுவ உதவிகளுக்கான செலவை நேட்டோ அமைப்பில் இருக்கும் ஐரோப்பிய நாடுகள் ஏற்க வேண்டும்" என ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிய ராணுவ உதவிகள் மற்றும் வெடிமருந்துகளுக்கான செலவை ஐரோப்பிய நாடுகள் திரும்பச் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``உக்ரைனுக்கு அமெரிகக அளித்து வரும் ஆதரவிற்கான செலவை யார் ஏற்பது என்ற கேள்வி மீண்டும் வலுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டமைப்பு இணைந்து உருவாக்கிய புதிய திட்டத்தின் கீழ், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் ஆயுதங்களுக்கான தொகையை ஐரோப்பிய நாடுகளே செலுத்தி வருகின்றன.

அமெரிக்காவின் சொந்த ஆயுதக் கையிருப்பு குறைந்துள்ளதால், பிற நட்பு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். ஈரான் உடனான போரின் காரணமாக அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆயுத விற்பனை விரைவில் மீண்டும் தொடங்கும். அமெரிக்காவின் வெடிமருந்து உற்பத்தியை அதிகரித்து கையிருப்பை உயர்த்தி வருகிறோம்.


Nakkeeran 57 minutes ago
Home Flash News