Select Location
All Locations
State
Region
City / District
அசாம் - தமிழ் இலக்கியத்துக்கு பாலமாகும் சிஐசிடி: அசாமிய வைணவ இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்க்க 15 நாள் பயிலரங்கு

அசாம் - தமிழ் இலக்கியத்துக்கு பாலமாகும் சிஐசிடி: அசாமிய வைணவ இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்க்க 15 நாள் பயிலரங்கு

புதுடெல்லி: அசாமிய வைணவ இலக்​கி​யங்களைத் தமிழில் வெளியிட 15 நாள் பயிலரங்​கம் குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் துவங்​கியது. சென்​னை​யில் இயங்​கும் மத்​திய அரசின் சிஐசிடி இந்​தி​யாவின் பெரும்​பாலான மொழிகளை தமிழுடன் இணைக்​கும் பணி​யைச் செய்​கிறது. இதற்​காக, குவாஹாட்டி பல்​கலைக்​கழகத்​தில் ‘அசாமிய வைணவ இலக்​கி​யங்​களைச் செம்​மொழித் தமிழில் மொழிபெயர்த்​தல்’ எனும் தலைப்​பில் ஒரு சிறப்​புப் பயிலரங்​கம் துவங்கி உள்​ளது.

இப்​ப​யிலரங்கை குவாஹாட்டி பல்​கலைக்​கழகத்​தின் இந்​திய மொழிகள் மற்​றும் இலக்​கிய ஆய்​வுத்​துறை​யுடன் இணைந்து சிஐசிடி நடத்​துகிறது. அசாமின் செழு​மை​யான வைணவ இலக்​கிய மரபைச் செம்​மொழித் தமிழில் மொழிபெயர்ப்​ப​தன் வழி​யாக இரு பகு​தி​களுக்​கும் இடையே குறிப்​பிடத்​தக்க இலக்​கியப் பாலம் ஒன்றை உரு​வாக்​கு​வதே இம்​முயற்​சி​யின் நோக்​க​மாகும்.

பயிலரங்​கில் உரை​யாற்​றிய குவாஹாட்டி பல்​கலைக்​கழகத்​தின் துணைவேந்​தர் பேராசிரியர் நனி கோபால் மஹன்​தா, ‘அசாம் மற்​றும் தமிழ்​நாட்டு வைணவ மரபு​களுக்கு இடையி​லான பண்​பாட்டு மற்​றும் அறி​வு​சார் தொடர்​பு​கள் ஆழமாக உள்​ளன’ எனத் தெரிவித்தார். நிகழ்ச்​சி​யில் சிறப்​புரை​யாற்​றிய சிஐசிடி இயக்​குந​ரான பேராசிரியர் இரா.சந்​திரசேகரன், ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் கூறுகை​யில், ‘மகாபுருஷ ஸ்ரீமந்த சங்​கரதேவர் மற்றும் மாதவ​தேவரின் படைப்​பு​களால் முதன்​மை​யாக வடிவ​மைக்​கப்​பட்ட தனித்​து​வ​மான வைணவ இலக்​கிய மரபு அசாமுக்கு உண்​டு.

அவர்​களின் இலக்​கியப் படைப்​பு​கள், பக்​தித் தத்​து​வம், பாடல்​கள், நாடகப் படைப்​பு​கள் அசாமின் பண்​பாட்டு அடை​யாளத்தை வடிவ​மைப்​ப​தில் ஆழமான பங்​காற்​றி​யுள்​ளன. இப்​படைப்​பு​களைச் செம்​மொழித் தமிழில் மொழிபெயர்ப்​ப​தன் மூலம், அசாமின் அறி​வு​சார், ஆன்​மிக மற்​றும் இலக்​கியப் பாரம்​பரி​யத்​தைத் தமிழ் அறிஞர்களும் வாசகர்​களும் அறிந்​து​கொள்ள வழிபிறக்​கும்’ எனத் தெரி​வித்​தார்.

இந்​நிகழ்ச்​சி​யில், பேராசிரியர் திலீப் போரா வரவேற்​புரை நிகழ்த்த, முனை​வர் துர்​ஜ்ஜடி சர்மா அறி​முக உரை வழங்​கி​னார். குவாஹாட்டி பல்​கலைக்​கழகத் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனை​வர்​ பி.விஜயகு​மார்​ நிகழ்ச்​சி​யை ஒருங்​கிணைத்​தார்​.


24 News 55 minutes ago
Home Flash News