Select Location
All Locations
State
Region
City / District
'நொடிப்பொழுதில் விடை வழங்கும் ஏஐ காலத்திலும்...'-மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து

'நொடிப்பொழுதில் விடை வழங்கும் ஏஐ காலத்திலும்...'-மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து

கல்வி என்பது வெறும் ஏட்டறிவு மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் ஒழுக்கத்தையும், எதிர்காலத்தையும் செதுக்கும் உன்னதக் கலை. அத்தகைய உன்னதமான கல்வியை நமக்கு வழங்கும் ஆசிரியர்களைப் போற்றும் நன்னாளாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தியா முழுவதும் 'ஆசிரியர் தினம்' மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தலைவர்களும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதில், 'ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் எதிர்காலத்தை அடையாளம் கண்டு, மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!

நொடிப்பொழுதில் விடைகளை வழங்கும் AI காலத்தில், எதையும் பகுத்தறிந்து, சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி ஆசிரியர்களின் பெரும் பணி! அறிவால் உயர்ந்து, பகுத்தறிவால் தெளிந்து, மனிதநேயத்தால் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க #TeachersDay-வில் உறுதிகொள்வோம்!' என தெரிவித்துள்ளார்.


24 News 52 minutes ago
Home Flash News