Select Location
All Locations
State
Region
City / District
```திமாகி நக்சல்' என்ற வார்த்தை ஹோமியோபதி மருந்து போன்றது" - என்ன சொல்கிறார் பிரதமர் மோடி?

```திமாகி நக்சல்' என்ற வார்த்தை ஹோமியோபதி மருந்து போன்றது" - என்ன சொல்கிறார் பிரதமர் மோடி?

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீராம் வர்த்தகக் கல்லூரியின் (SRCC) நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, ``காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான ‘சாத்ரோன் கி கூஞ்ச்’ இயக்கம் ‘பொய்களின் கூச்சல்’ (ஜூட் கி கூஞ்ச்). உண்மையின் கம்பீரமான கர்ஜனைக்கு முன்னால் பொய்யான உரத்த சத்தங்கள் நிலைத்து நிற்க முடியாது.

கடந்த 2013-ம் ஆண்டு இதே கல்லூரி மேடையில் எதிர்க்கட்சித் தலைவராக நான் பேசினேன். அன்று நான் அளித்த வாக்குறுதிகளையும், நாட்டின் தற்போதைய வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்க்க எனக்குத் தைரியம் இருக்கிறது.

2013-ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்து, பணவீக்கம் 10 சதவீதமாக உயர்ந்து, ஊழல்களும் பயங்கரவாதத் தாக்குதல்களும் நிறைந்திருந்தது. இன்று உலகின் மிகவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரச் சக்தியாக உருவெடுத்துள்ளது. சமீபத்தில் தான் குறிப்பிட்ட 'சிந்தனைவாதி நக்சல்கள்' (திமாகி நக்சல்) என்ற வார்த்தை ஹோமியோபதி மருந்து போன்றது.


Vikatan 2 hours ago
Home Flash News