“8 முக்கிய பரிந்துரைகள்” - முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் எம்.பி. கடிதம்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு, கிராம சபைகளை அடித்தட்டு மக்களாட்சியின் வலுவான அமைப்புகளாக மாற்றுவதற்கான 8 முக்கியப் பரிந்துரைகள் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கிராமப்புற மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்புகளைக் கருத்தில் கொண்டு, பஞ்சாயத்து தலைவருக்கு ₹16,000, துணைத் தலைவருக்கு ₹10,000 மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு ₹8,000 என மாதாந்திர ஊதியத்தை உயர்த்த வேண்டும்
கிராமங்களில் இருக்கும் அல்லது புதிதாகத் திறக்கப்படும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிராக கிராம சபை தீர்மானம் நிறைவேற்றினால், அதற்கு முன்னுரிமை அளித்து அக்கடைகளை மூடும் அல்லது தடுக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும்.
கிராம சபையின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்வதுடன், மாதிரி கிராம சபை கூட்டங்களை முதலமைச்சர், அமைச்சர்கள் முன்னிலையில் தொலைக்காட்சிகளில் நேரலை செய்ய வேண்டும்.
கிராம சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை (Action Taken Report) பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.