4 மாடி வரை மூடிய பனி, நடுங்கும் ரஷ்யா ...100 ஆண்டுகளில் இல்லாத பனிப் பேரழிவு!
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், 40 அடி உயரத்திற்குப் பனி குவிந்ததால் வீடுகள் மூழ்கி உள்ளன. அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து மற்றும் மின்சாரம் முடக்கப்பட்டுள்ளது.

ஓகோட்ஸ்க் கடலில் உருவான பல குறைந்தஅழுத்த மண்டலங்கள் ஒன்றிணைந்துஇந்த கடும் புயலை உருவாக்கியுள்ளன.கடந்த ஜன.15 முதல் பெய்துவரும் இடைவிடாத பனிப் பொழிவு, வெறும் 24 மணி நேரத்திற்குள் 39 மி.மீ அளவைத் தாண்டியுள்ளது. மணிக்கு 25-30 மீட்டர் வேகத்தில் வீசும் பலத்த கிழக்கத்திய காற்றினால், பனி மலை போலக் குவிந்து 4-வது மாடி வரை வீடுகளைச் சூழ்ந்துள்ளது.