சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை: சரத்குமார் அறிவிப்பு
தூத்துக்குடியில் பேசிய நடிகர் சரத்குமார், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடமாட்டேன் என்றும், தன்னுடன் பயணித்த 5 பேருக்கு சீட் வாங்கிக் கொடுப்பதே தனது இலக்கு என்றும் தெரிவித்தார். கூட்டணி முடிவுகளை கட்சி தலைமை அறிவிக்கும் என்றும் கூறினார்.
பாஜக கூட்டணி குறித்து விமர்சிப்பவர்களை மக்கள் தேர்தலில் பதிலளிப்பார்கள் என்றும், கூட்டணி ஆட்சியா அல்லது தனி கட்சி ஆட்சியா என்பது தேர்தலுக்குப் பிறகு தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் விளக்கினார்.
மேலும், நடிகர் விஜய்யை விமர்சித்த அவர், அரசியலில் அனுபவம் முக்கியம் என்றும், கூட்டம் வருவது மட்டும் போதாது; மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது தேர்தலில் தான் தெரிய வரும் என்றும் தெரிவித்தார்.