அமெரிக்காவின் அழுத்தம்... எரிபொருள் தட்டுப்பாடு இயல்பு வாழ்க்கையை இழந்துதவிக்கும் கியூபா
உலகின் சர்க்கரை கிண்ணம் என அழைக்கப்படும் கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு நாளுக்கு நாள் மோசமான நிலையை அடைந்துவருகிறது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரமும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையையும் முடங்கியுள்ளது. அமெரிக்கா வெனிசுலாவில் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை மற்றும் மெக்சிகோ மீதான வரிவிதிப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக கியூபாவுக்கான எண்ணெய் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
கியூபாவின் மற்ற நட்பு நாடுகளும் எரிபொருள் வழங்க முன்வரவில்லை. மேலும் கியூபாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஏற்பட்ட தீ விபத்துகள் மற்றும் அவற்றின் பராமரிப்புப் பணிகள் காரணமாக உள்நாட்டு உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகிறது இந்த தீவுநாடு