தாய்கிழவி மேக்-அப் கலைஞர் வினீஷ் விஜயன்: ராதிகா முதல் ராஜமௌலி வரை! சினிமா உலகில் புதிய சாதனை!
தாய்கிழவி படத்தில் மேக் அப் ஆர்டிஸ்டாக பணியாற்றிய வினீஷ் விஜயன் தற்போதுர் ராஜமெளலி இயக்கும் வாரனாசி படத்தில் பணியாற்றி வருகிறார்
ராதிகா நடித்துள்ள தாய்கிழவி திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ராதிகாவின் நடிப்பு மட்டுமில்லாமல் இப்படத்தில் மேக் அப் கலைஞராக பணியாற்றிய வினீஷ் விஜயன் தற்போது திரைத்துறையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். தாய்கிழவி படத்தின் மூலம் கமலின் கல்கி 2 மற்றும் ராஜமெளலி இயக்கும் வாரனாசி ஆகிய படங்களைல் பணியாற்றும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள தாய்கிழவி திரைப்படம் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 2026 ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் கழித்து முதல் வெற்றிப்படமாக இப்படம் அமைந்துள்ளது. இப்படத்தில் ராதிகா 80 வயது பவுனுத்தாய் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். ராதிகாவின் நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றாலும் அவரை 80 வயது கிழவியாக தத்ரூபமாக காட்டியவர் இப்படத்தின் மேக் அப் கலைஞர் வினீஷ் விஜயன். ஒரு முழுநீள படத்தில் இவர் பணியாற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் தாய்கிழவி படத்தில் இவரது திறமையைப் பார்த்தப் பின்னர் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் திறந்துள்ளன. இதுகுறித்து இடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
கமலிடம் இருந்து பாராட்டு
கமல் தன்னை பாராட்டியது குறித்து கூறுகையில் "படப்பிடிப்பின் போது ராதிகா மேடம் கமல் சாருக்கு புகைப்படங்களை அனுப்புவார். ப்ராஸ்தெடிக் மேக் அப் போடுவதில் ஒரு மாஸ்டர். அவருக்கு என்னுடைய வேலை பிடித்திருந்தது. தாய்கிழவி சிறப்பு திரையிடலின் போது கமல் சார் வந்திருந்தார். இடைவேளையின் போது அவரை வந்து சந்திக்க சொன்னார். நாங்கள் ஒரு மணி நேரம் பேசினோம். அப்போது மேக் அப்காக பயண்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்து தொழில்நுட்பம் குறித்து நிறைய பேசினோம். சில புதிய தொழில்நுட்பங்களை கமல் எனக்கு அறிமுகப்படுத்தினார். அவருடான அந்த உடையாடலே எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது .
ராஜமெளலி படத்தில் வாய்ப்பு
"தாய்கிழவி படத்தில் ராதிகா மேடமில் மேக் அப் பார்த்து ராஜமெளலி சார் எனக்கு ஃபோன் செய்தார். தற்போது அவர் இயக்கி வரும் வாரனாசி படத்தில் நான் பணியாற்றி வருகிறேன். ' என்று வினீஷ் தெரிவித்துள்ளார்