... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

ராமேசுவரம்: எல்லை தாண்​டிய குற்​றச்​சாட்​டின் பேரில் தமிழக மீனவர்​கள் 7 பேரை இலங்கை கடற்​படை​யினர் சிறை பிடித்​தனர். ராமேசுவரம் மீன்​பிடி துறை​முகத்​தில் இருந்து புதன்கிழமை சுமார் 400 விசைப்​படகு​களில் 2 ஆயிரத்​துக்​கும்மேற்​பட்ட மீனவர்​கள் கடலுக்​குச் சென்​றனர். நெடுந்​தீவு அருகே ராமேசுவரத்தைச் சேர்ந்த சசிக்​கு​மார் என்​பவருக்கு சொந்​த​மான விசைப்​படகில் புதன்​கிழமை நள்​ளிரவு மீன்​பிடித்து கொண்​டிருந்​த​போது எல்லை தாண்​டியதாக இலங்கை கடற்​படை​யினரால் சிறை பிடிக்​கப்​பட்​டனர்.

அதைத்தொடர்ந்து, படகிலிருந்த ராமர் (38), வீரணன் (55), கருப் பையா (53) ஆபிரஹாம் (23 ஆகிய 4 மீனவர்​களை கைது செய்து ஊர்​காவல்துறை கடற்​படை முகா​முக்கு இலங்கை கடற்​படை​யினர் அழைத்​துச் சென்​றனர். மேலும் நெடுந்​தீவு கடற்​பரப்பில் மீன் பிடித்துவிட்டு திரும்​பிக் கொண்​டிருந்த சிம்​சன் என்​பவருக்குச் சொந்​த​மான மீன்​பிடி விசைப்​படகின் பக்​க​வாட்டு பகு​தி​யில் உள்ள மரப்​பலகை உடைந்து கடல் நீர்படகுக்​குள் புகுந்​த​தால், நேற்று (வி​யாழக்​கிழமை) அதி​காலை நடுக்​கடலில் மூழ்​கியது.

படகில் இருந்த சீனி​வாசன், செபஸ்​தி​யான், சூசை வியாகுலம் ஆகிய 3 மீனவர்​களும் கடலில் குதித்து ஐஸ் பெட்டி மற்​றும் டீசல் கேன்​களை பிடித்த வண்​ணம் வெகுநேர​மாக தத்​தளித்து கொண்​டிருந்​தனர். இவர்​களை இலங்கை கடற்​படை​யினர் பத்​திர​மாக மீட்டு ஊர்​காவல்​துறை கடற்​படை முகா​முக்கு கொண்டு வந்​தனர். 7 மீனவர்​களை​யும் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி நீதி​மன்​றக் காவலில் யாழ்ப்​பாணம் சிறை​யில் அடைத்தனர்.

Source : Hindu Tamil

1 hour ago

Home Flash News