அதிமுகவில் மீண்டும் பிளவு- இபிஎஸ்க்கு ஆதரவாக 17 பேர் மட்டுமே மனு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றக்குழு தலைவராக செயல்படுவார் என சட்டப்பேரவை செயலரிடம் கட்சியின் 17 எம்.எல்.ஏக்கள் மனு அளித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றக்குழு தலைவராக செயல்படுவார் என சட்டப்பேரவை செயலரிடம் கட்சியின் 17 எம்.எல்.ஏக்கள் மனு அளித்துள்ளனர். மொத்தம் 47 எம்.எல்.ஏக்கள் அதிமுக சார்பில் வென்றுள்ள நிலையில், 17 எம்.எல்.ஏக்கள் சட்டசபை செயலரிடம் மனு அளித்துள்ளதால் அதிமுக மீண்டும் பிளவுபடுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அக்ரி, கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், ஓ.எஸ். மணியன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மனு அளித்துள்ளனர். மீதமுள்ள 30 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையில் உள்ளதால், அவர்கள் எடுக்கப்போகும் முடிவு அடிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் சிக்கலாக அமைந்துள்ளது.
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்மும் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அவர் சட்டமன்றக்குழு தலைவராகவும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.