Select Location
All Locations
State
Region
City / District
செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை அவகாசம்!

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை அவகாசம்!

சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து...

சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான காலக்கெடு ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. உரிமம் பெறாத செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு ஜூன் 16 ஆம் தேதி முதல் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதுவரை 78,392 செல்லப் பிராணிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்களில் 9,656 உரிமங்கள் புதுப்பிக்கப்படவில்லை எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில், செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற, நாய்களுக்கு கண்டிப்பாக மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ரேபிஸ் தடுப்பூசியும் போடப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த பின்னரே நாய்களுக்கு சென்னை மாநகராட்சி உரிமம் வழங்கும்.


Dinamani 1 hour ago
Home Flash News