Select Location
All Locations
State
Region
City / District
 திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்: மு.க.ஸ்டாலின்..!

திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்: மு.க.ஸ்டாலின்..!

செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கஜேந்திரன், அவரது ஆதரவாளர்கள் சுமார் 1,000 பேருடன் திமுகவில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், அதிமுக செங்கல்பட்டு ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் தலைமையிலான 1000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிலையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, வருக... வருக... என் வரவேற்கிறேன்! “75 ஆண்டுகளாக தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும், பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க. தான். 6 முறை ஆட்சிப் பொறுப்புக்கு வந்த தி.மு.க-வில் தங்களை இணைத்துக்கொள்ள வந்துள்ளீர்கள். உங்கள் அனைவரையும் வருக... வருக... என்று மனமார வரவேற்கிறேன் என கூறினார். “பொதுவாக ஒரு இயக்கத்தில் இருந்து மற்றொரு இயக்கத்திற்கு செல்கிறார்கள் என்றால், அதில் கிடைக்கும் லாபம் மற்றும் அதிகாரத்தை மனதில் வைத்துத்தான் செல்வார்கள். 

அதிலும் ஆளும் கட்சியை நோக்கித்தான் அதிகம் செல்வார்கள்.ஆனால் இன்று தி.மு.க-வை நோக்கி வருகிறார்கள் என்றால், பதவிக்காகவோ, சொகுசான வாழ்க்கைக்காகவோ யாரும் வரவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது என கூறிய அவர் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதால் கூட்டணிக் கட்சிகளை அனுப்பி வைத்தாக கூறினார்.திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும். திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பிய கட்சிகளின் ஆதரவோடுதான் தவெக ஆட்சி நடக்கிறது. பாஜக வந்துவிடக்கூடாது என்பதற்காகவே கூட்டணி கட்சியினரை வழி அனுப்பி வைத்தேன் என்றார். “எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வில் இணைய வந்துள்ள அனைவரின் நோக்கம், தி.மு.க-வில் இணைந்து தமிழ் சமுதாயத்திற்காக பாடுபட வேண்டும், இழந்து கொண்டிருக்கும் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதாகும்.தொண்டனாக இருந்தாலும், தலைவராக இருந்தாலும் தனது கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என கூறினார்.


Smacy News 1 hour ago
Home Flash News