Select Location
All Locations
State
Region
City / District
பண்டைய வங்கமொழியின் வைஷ்ணவ பக்திப் பாடல்கள் தமிழில் மொழி பெயர்ப்பு

பண்டைய வங்கமொழியின் வைஷ்ணவ பக்திப் பாடல்கள் தமிழில் மொழி பெயர்ப்பு

புதுடெல்லி: பண்​டைய வங்க மொழி​யில் வைஷ்ணவ பக்​திப் பாடல்​கள், வைஷ்ணவ பதாவளி என்​றழைக்​கப் ​படு​கின்​றன. இவை தமிழின் நாலா​யிர திவ்​யப் பிரபந்த காலத்​தில் எழுதப்பட்டவை. இந்த வைஷ்ணவ பதாவளியை, தமிழில் மொழி பெயர்க்க முயற்​சிகள் நடக்​கின்​றன. அதற்​காக விஸ்வ பாரதி பல்​கலைக்​கழகத்​துடன் இணைந்து செம்மொழி தமிழாய்வு மத்​திய நிறு​வனம் (சிஐசிடி), கடந்த ஜுன் 19 தேசி​யப் பயிலரங்​கத்​தைத் தொடங்​கியது. இது ஜூலை 3ம் தேதி வரை நடை​பெறுகிறது. இப்​ப​யிலரங்​கின் சிறப்பு விருந்தினராக, டெல்லி பல்​கலை இந்​திய மொழிகள் மற்​றும் இலக்கிய ஆய்​வுத் துறை பேராசிரியர் டாக்​டர் டி.உ​மா தேவி பங்கேற்​றார். விஸ்வ பார​தி​யின் மொழிகள், இலக்​கி​யம் மற்​றும் பண்​பாட்டு நிறு​வனம், பேராசிரியர்​கள், ஆய்​வாளர்​கள் மற்​றும் மாணவர்​கள் பங்கேற்றனர். இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் சிஐசிடி இயக்​குநர் பேராசிரியர் இரா.சந்​திரசேகரன் கூறுகை​யில், ‘‘வங்​காள வைஷ்ணவ பக்தி இலக்​கிய மரபின் முக்​கிய அங்​க​மாக விளங்​கும் சுமார் 1,200 பதாவளிப் பாடல்​களைச் செம்​மொழித் தமிழில் மொழி பெயர்க்​கும் அரிய பணி இப்​ப​யிலரங்​கின் மூலம் மேற்கொள்​ளப்பட உள்​ளது. தமிழ் மற்​றும் வங்க இலக்​கிய மரபுகளை இம்​மாபெரும் மொழி பெயர்ப்​புப் பணி இணைக்​கும்.

இது, இந்​திய மொழிகளின் பரஸ்​பரப் புரிதலை​யும் தேசிய ஒருமைப்​ பாட்​டை​யும் வலுப்​படுத்​தும் வரலாற்​றுச் சிறப்​புமிக்க முயற்​சி. சங்க இலக்​கி​யங்​கள் எட்​டுத்​ தொகை மற்​றும் பத்​துப்​பாட்டு நூல்​களைப் பண்​டைய வங்க மொழி​யில் மொழி பெயர்க்கும் பெரும் ஆய்​வுத் திட்​டத்​தை​யும் தமிழ்த்​துறை தற்போது செயல்​படுத்தி வரு​கிறது" என்று தெரி​வித்​தார். விஸ்வ பாரதி பல்​கலைக் ​கழகம் நோபல் பரிசு பெற்ற ரவீந்​திர​நாத் தாகூ​ரால் நிறு​வப்​பட்​டது. இங்​கு, தற்​போது 18 துறை​களின் மூலம் 23 இந்​திய மற்​றும் வெளி​நாட்டு மொழிகளில் கற்​பித்​தல் மற்​றும் ஆய்​வுப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இந்​நிறு​வனத்​தின் தமிழ்த்​துறை கடந்த 40 ஆண்​டு​களுக்​கும் மேலாக தமிழ் மொழி, இலக்​கி​யம், மொழிபெயர்ப்பு மற்​றும் ஒப்​பிலக்​கிய ஆய்​வுத் துறை​களில் சிறப்​பான பங்​களிப்பை வழங்​கி வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.


Hindu Tamil 2 hours ago
Home Flash News