Select Location
All Locations
State
Region
City / District
பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யாவிடில் ஜூைல 7ம் தேதி கோட்டை நோக்கி பேரணி; பெரியபாளையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் அதிரடி

பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யாவிடில் ஜூைல 7ம் தேதி கோட்டை நோக்கி பேரணி; பெரியபாளையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் அதிரடி

ஊத்துக்கோட்டை: முதல்வர் விஜய், விவசாயிகளுக்கு அளித்த உத்தரவாதமான கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற கோரி ஜூன் 22ம் தேதி (இன்று) முதல் தமிழகம் முழுவதும் விவசாயிகள் சார்பில் அனைத்து மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் கூட் சாலையில், விவசாயிகள் சங்க சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தேவராஜ் தலைமையில் ஏராளமானோர் ஊர்வலமாக சென்று நான்கு முனை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 பின்னர் ஊர்வலமாக சென்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்த்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். அப்போது, முழுமையான தள்ளுபடி பற்றி முதல்வர் விஜய் அறிவிக்காவிட்டால் ஜூலை 7ம் தேதி கோட்டையை முற்றுகையிடுவோம்’ என விவசாயிகள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் ரவி, விவசாய போராளி அரிகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ரவிராவ், ஜெகவீரன், சீனிவாசன், ரமேஷ்பாபு, விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Dinakaran 2 hours ago
Home Flash News