அம்மோனியா கேஸ் கசிந்தது எப்படி? - விசாரணையில் அம்பலம்
இறால் தொழிற்சாலையில் அமோனியா கேஸ் கசிந்தது எப்படி என்பது தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.
பெரியபாளையத்தில் செயல்பட்டு வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு சம்பவத்தில் 74 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 67 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6- ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 5 பேர் உயிரழந்த நிலையில் மேலும் ஒரு பெண் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இறால் தொழிற்சாலையில் அமோனியா கேஸ் கசிந்தது எப்படி என்பது தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது. ஆலையின் முதல் தளத்தில் இருந்த 80 கிலோ சிலிண்டரில் இருந்து அமோனியா வாயு வெளியேறியுள்ளது. அமோனியாவை குளிரூட்டும் அமைப்பின் பிரஷர் வால்வில் இருந்து கசிவு ஏற்பட்டுள்ளது. 2km சுற்றளவில் வாயு கலந்தது உறுதியாகியுள்ளது. கடந்த காலங்களில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ஆலை வளாகத்தில் பாதுகாப்பாற்ற முறையில் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டதால் பாதிப்பு அதிகரித்ததாக தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.