Select Location
All Locations
State
Region
City / District
அரபு நாடுகளில் தருவதை போல் கடும் தண்டனை வேண்டும்..! பேரவையில் சௌமியா அன்புமணி ஆவேசம்

அரபு நாடுகளில் தருவதை போல் கடும் தண்டனை வேண்டும்..! பேரவையில் சௌமியா அன்புமணி ஆவேசம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி, பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனைகளை வழங்க வேண்டும். அரபு நாடுகள் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வழங்கப்படுவதைப் போல உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று ஆவேசமாக பேசினார். பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகள் நீதிமன்றங்களில் பல வருடங்கள் வழக்குகளை இழுத்தடித்து எளிதாக வெளியே வந்துவிடலாம் என்ற தைரியத்தில் தவறு செய்கிறார்கள்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது கை வைப்பவர்களை இனிமேலும் சும்மா விடக்கூடாது, இதற்கு மேல் பொறுமையாக இருப்பதில் அர்த்தமில்லை. அவர்களுக்கு சட்டப்படி உடனடியாக மரண தண்டனை வழங்கி, இனி இது போல தவறு செய்ய கூடாது என பாலியல் கொடுமையில் ஈடுபட நினைப்போருக்கு மரண பயத்தையும் உயிர் பயத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்றார்.தொடர்ந்து பேசிய அவர், இதுபோன்ற வழக்குகளை மாதக்கணக்கில் நடத்திக் கொண்டிருக்காமல், குற்றவாளிகளுக்கு விரைந்து மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் குற்றவாளிகள் மத்தியில் உயிர் பயம் ஏற்படும் என்றும் ஆணித்தரமாக தெரிவித்தார்


Dinakaran 1 hour ago
Home Flash News