Select Location
All Locations
State
Region
City / District
 தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

2017ல் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தியதில் குளறுபடி நடந்ததாக எழுந்த புகாரில் 156 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக கூறி அமலாக்கத்துறையினரும் வழக்கு பதிந்துள்ளனர். அதன் அடிப்படையில் தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட 18 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரிகள் வீடுகள், நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1,058 விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தியதில் குளறுபடி நடந்ததாக எழுந்த புகாரில் 156 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது. 2021-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.


Smacy News 1 hour ago
Home Flash News