Select Location
All Locations
State
Region
City / District
விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை அறிவித்த ஆதவ் அர்ஜூனா

விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை அறிவித்த ஆதவ் அர்ஜூனா

முதல்வர் விஜய் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் தங்கி பயிற்சி எடுத்துவரும் விளையாட்டு வீரர் - வீராங்கனையர் ஒவ்வொருவருக்கும் தினசரி உணவுக்காக ஒதுக்கப்படும் தொகை ரூ.350-லிருந்து ரூ.450-ஆக உயர்த்தப்படுவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள அறிக்கையில், “

1. தினசரி உணவுப்படி உயர்த்தி வழங்குதல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி, சிறப்பு விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் பயிற்சி பெறும் 2,600 மாணவ, மாணவியர்களின் திறன் மேம்பட ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்குவதற்கு உணவுப்படி தொகையினை நாளொன்றுக்கு தலா ரூ.350/- லிருந்து ரூ.450/-ஆக உயர்த்தி வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இதற்கான செலவினத் தொகை ரூ.29.12 கோடியிலிருந்து ரூ.37.44 கோடியாக உயர்த்தியதன் மூலம், ரூ.8.32 கோடி கூடுதலாக வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

2. சீருடைகளுக்கான தொகை உயர்த்தி வழங்குதல்

தினசரி பயன்பாட்டிற்கும், சுகாதாரமான முறையில் விளையாடும் வகையில் விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் பயிற்சி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சீருடைகளுக்கான தொகை ரூ.6,000/-த்திலிருந்து, ரூ.15,000/-ஆகவும், சிறப்பு நிலை விளையாட்டு விடுதி கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சீருடைகளுக்கான தொகை ரூ.10,000/- நிதிலிருந்து ரூ.25,000/-ஆகவும் உயர்த்தி, இதற்கான செலவினத் தொகை ரூ.1.70 கோடியிலிருந்து ரூ.4.25 கோடியாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு ரூ.2.55 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3. விளையாட்டு உபகரணங்களுக்கான தொகை உயர்த்தி வழங்குதல்

தனிநபர் திறனை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் பயிற்சி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பிரத்யேக பயிற்சி பெறுவதற்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு தொகை ரூ.2,000/-த்திலிருந்து, ரூ.10,000/- ஆக உயர்த்தி இதற்கான செலவினத் தொகை ரூ.80 லட்சத்திலிருந்து ரூ.2.60 கோடியாக உயர்த்தப்ட்டுள்ளது. இதற்கான ரூ.1.80 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 2600 விடுதி விளையாட்டு வீரர்களின் உணவு, சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கு ரூ.12.67 கோடி கூடுதலாக உயர்த்தி, செலவினத் தொகை ரூ, ரூ.31.72 கோடியிலிருந்து ரூ.44.39 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது” என அறிவித்துள்ளார்.


Smacy News 1 hour ago
Home Flash News