Select Location
All Locations
State
Region
City / District
“ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் உயர்மட்ட தொடர்புகள் இருப்பது தெளிவு” - கேஜ்ரிவால் கருத்து

“ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் உயர்மட்ட தொடர்புகள் இருப்பது தெளிவு” - கேஜ்ரிவால் கருத்து

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் கீழ்மட்ட ஊழியர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், நீண்ட காலமாக நடைபெற்ற இவ்வளவு பெரிய மோசடியை கீழ்மட்ட ஊழியர்கள் மட்டுமே செய்திருக்க முடியாது என்றும் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்ற ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், அங்கு வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து அனுமன் கோயிலுக்கும் சென்று வழிபட்டார். அங்கிருந்த கோயில் அர்ச்சகர்களிடம் அவர் ஆசி பெற்றார். அயோத்தி ராமர் கோயில் வழிபாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், “நாங்கள் இப்போதுதான் ராமர் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு திரும்புகிறோம். அனைவரின் நல்வாழ்வு, வளம், ஆரோக்கியத்துக்காக நாங்கள் ராமரிடம் வேண்டிக்கொண்டோம். அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பது வெறும் கண்துடைப்பு மட்டுமே. இந்த வழக்கில் கீழ்மட்ட ஊழியர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இவ்வளவு பெரிய மோசடியை, நீண்ட காலமாக கீழ்மட்ட ஊழியர்கள் மட்டுமே செய்திருக்க முடியாது. இதில், உயர்மட்டத் தொடர்புகள் இருப்பது தெளிவாக தெரிகிறது. கீழ்மட்ட ஊழியர்கள் மீது பழியைச் சுமத்திவிட்டு, செல்வாக்கு மிக்கவர்களைப் பாதுகாக்கும் முயற்சி நடைபெறுகிறது” என குற்றம்சாட்டினார்.

பின்னணி: அயோத்​தி ராமர் கோயி​லில் சுவாமிக்கு அளிக்கப்பட்ட காணிக்கை பணம் மற்​றும் நகைகள் காணாமல்போன​தாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசா​ரணைக் குழு (எஸ்ஐடி) அமைத்து உத்தரப் பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் உத்தரவிட்டார். எஸ்ஐடி தனது 20 பக்க இடைக்​கால அறிக்​கையை அரசிடம் சமர்ப்​பித்​தது. அறக்​கட்​டளை மற்​றும் வங்கியுடன் தொடர்​புடைய சந்​தேக நபர்​கள் உட்பட சுமார் 150 பேரிடம் சிறப்புக் குழு விசா​ரணை நடத்​தி​யுள்​ளது. மேலும், ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்​கட்​டளையை மறு சீரமைக்க வேண்​டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அது அரசுக்கு வழங்கி உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் 8 பேர் மீது உத்தரப் பிரதேச காவல் துறை வழக்கு பதிவு செய்தது. கைதான 8 பேர் யார் யார்?: வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களில் 8 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அவினாஷ் ஷுக்லா, அனுகல்ப் மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா, மணிஷ் குமார் யாதவ், கருணேஷ் பாண்டே, ராமஷங்கர் மிஸ்ரா, சுபாஷ் ஸ்ரீவஸ்தவா, ராம் ஷங்கர் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் அடையாளம் தெரியாத பலர் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர். திருட்டு, நம்பிக்கை துரோகம், திருடப்பட்ட சொத்தைப் பெறுதல் அல்லது மறைத்தல், சதி என பிஎன்எஸ் குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு பிரிவின் கீழும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Hindu Tamil 2 hours ago
Home Flash News