Select Location
All Locations
State
Region
City / District
தமிழ்நாட்டிற்கு புதிய மாவட்டம்..

தமிழ்நாட்டிற்கு புதிய மாவட்டம்..

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் கும்பகோணம் மாநகரமானது காவிரி, அரசலாறு என்ற 2 ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற கோயில்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஆன்மிக தலமாக விளங்கும் கும்பகோணத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு ரெயில் போக்குவரத்தை போல் பஸ் போக்குவரத்தும் வசதியாக இருப்பதற்காக கும்பகோணத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கும்பகோணம் வெற்றிலை, திருப்புவனம் பட்டு, நாச்சியார்கோவில் பித்தளை குத்துவிளக்கு, பூஜை சாமான்கள் வாங்குவதற்காக வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் நாள்தோறும் கும்பகோணம் வந்து செல்வார்கள். கடந்த பல ஆண்டுகளாக கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருந்தாலும் அவை அனைத்து கோரிக்கையாக மட்டுமே இருந்து வருகின்றன. மக்களும் தங்களது கோரிக்கை நிறைவேறும் என்ற எண்ணத்தில் கும்பகோணம் பகுதிக்கு வரக்கூடிய அனைத்து அரசியல் முக்கிய பிரமுகர்களிடம் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்தபின் செய்தியாளர்களை சந்தித்த வேளாண்துறை அமைச்சர் வினோத், கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடியில் அவர்கள் விரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பருவ கால மாற்றங்கள் நிகழும் எல்நினோ கால கட்டத்தில் காவிரி டெல்டா பாசன பகுதி மக்களுக்கு உகந்த பயிர்களை சாகுபடி செய்ய ஆய்வு நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.


Smacy News 1 hour ago
Home Flash News