மா இண்டி பங்காரம் இரண்டாம் பாகம் அறிவிப்பு!
நடிகை சமந்தா நடித்த மா இண்டி பங்காரத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்த சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. பல வெற்றிப்படங்களில் நடித்தவர் பாலிவுட்டில் இணையத் தொடர்களில் நடித்து இந்தியளவில் கவனிக்கப்பட்டார்.
தற்போது, மா இண்டி பங்காரம் என்கிற இவர் நடித்த ஆக்ஷன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்று வருகிறது. தமிழில் எங்கள் தங்கம் எனப் பெயரிட்ட இப்படம் குடும்பப் பின்னணி நடக்கும் ஆக்ஷன் கதையாக உருவாகியிருந்தது. சமந்தா கணவர் ராஜ் நிதிமோர் உருவாக்கத்தில் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியிருந்தார். இதுவரை இப்படம் ரூ. 60 கோடிக்கு அதிகமாக வசூலித்து சமந்தாவுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது. மேலும், சமந்தா தாயாகவுள்ளதால் ஓரிரு ஆண்டுகள் சினிமாவிலிருந்து தற்காலிக ஓய்வில் இருப்பார் எனத் தெரிகிறது. இந்த நிலையில், மா இண்டி பங்காரத்தின் இரண்டாம் பாகும் முதல் பாகத்தைவிட விறுவிறுப்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் உருவாகும் என ராஜ் நிதிமோர் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.