Select Location
All Locations
State
Region
City / District
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தண்டனையை குறைத்த விவகாரம்: ஒன்றிய அரசுக்கு ரூ.50,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தண்டனையை குறைத்த விவகாரம்: ஒன்றிய அரசுக்கு ரூ.50,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தண்டனையை குறைத்த விவகாரம்; இலங்கைக்கு அனுப்பிய கடித விவரங்களை தெரிவிக்காத ஒன்றிய அரசுக்கு ரூ.50,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் படி இந்தியாவில், ஜாகீர் உசேன் 2022 வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது . தந்தையை விடுவிக்காமல், சிறையில் அடைப்பு என ஜாகிர் உசேன் மகன் சமீர் ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார். ஜாகிர் உசேன் நாடு கடத்தப்பட்ட போது, கடித விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. விவரங்களை வழங்காத ஒன்றிய உள்துறை, வெளியுறவுத் துறை இணைச் செயலாளர்களுக்கு 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஜூலை 9க்கு தள்ளிவைத்து நீதிபதிகள் அனிதா சுமந்த, சுந்தர் மோகன் அமர்வு ஆணையிட்டுள்ளது.


Dinakaran 1 hour ago
Home Flash News