Select Location
All Locations
State
Region
City / District
அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பிரதமர் மோடியின் 5 அன்பு கட்டளைகள்

அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பிரதமர் மோடியின் 5 அன்பு கட்டளைகள்

புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீரின் இமயமலை பகு​தி​யில், 12,730 அடி உயரத்​தில் அமைந்​துள்ள அமர்​நாத் குகைக் கோயி​லில் இயற்கையிலேயே தோன்​றும் பனி லிங்​கத்தை தரிசிக்க, ஆண்​டு​தோறும் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் யாத்​திரை வரு​கின்​றனர். நடப்​பாண்​டுக்​கான அமர்​நாத் புனித யாத்​திரையில் பங்கேற்கும் பக்தர்களின் முதல் குழுவை, ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்​ஹா, நேற்று முன்​தினம் வழி அனுப்பி வைத்தார். இந்த யாத்​திரை, ஆகஸ்ட், 28-ம் தேதி வரை நடக்கிறது. இந்​நிலை​யில் அமர்​நாத் செல்​லும் பக்​தர்​களுக்​காகப் பிரதமர் மோடி கடிதம் எழு​தி​யுள்​ளார்.

அந்த கடிதத்​தில் பிரதமர் மோடி கூறி​யிருப்​ப​தாவது: இந்த புனித யாத்​திரை ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை அனை​வரிடத்​தி​லும் பிர​திபலிக்​கிறது. ஒவ்​வொரு ஆண்​டும் பக்​தர்​களை அன்​போடும் உபசரிப்​போடும் வரவேற்​கும் ஜம்மு காஷ்மீர் மக்​களைப் பாராட்​டு​கிறேன். யாத்​திரை சீராக நடை​பெறு​வதை உறுதி செய்​வ​தில் ஈடு​பட்​டுள்ள ராணுவம், போலீ​ஸார், பேரிடர் மீட்​புக் குழுக்​கள், அதி​காரி​களுக்கு நன்​றி. இந்த யாத்​திரை​யின் போது இயற்​கையை பாது​காப்​பது உள்​ளிட்ட 5 முக்​கிய விஷ​யங்​களை பக்​தர்​கள் பின்​பற்ற வேண்​டும். இதை பக்​தர்​களுக்கு நான் அன்​புக் கட்​டளை​யாக தெரிவிக்​கிறேன்.
 1. இமயமலைப் பகுதி மற்​றும் புனித யாத்​திரைப் பாதைகளின் தூய்​மை​யைப் பேணி, அவற்​றின் இயற்கை அழகை பக்​தர்​கள் பாது​காக்க வேண்​டும். 2. அதி​காரி​களின் அனைத்து அறி​வுரைகளை​யும் பின்​பற்ற வேண்​டும்.\ 3. ஜம்மு காஷ்மீரின் வாழ்​வா​தா​ரங்​களை வலுப்​படுத்த, உள்​ளூர் தயாரிப்​பு​களை​ பக்​தர்​கள் ஆதரிக்க வேண்​டும். 4. புனிதப் பயணம் முடித்து வீடு திரும்​பியதும், குடும்ப உறுப்​பினர்​கள் அல்​லது அன்​புக்​குரிய​வர்​களின் பெயரில் ஒரு மரக்​கன்றை நடவேண்​டும். 5. யாத்​திரை​யின் போது ஒற்​றுமை, சகோ​தரத்​து​வம் மற்​றும் நல்​லிணக்க உணர்வை ஊக்​குவிக்க வேண்​டும். இந்த 5 அன்​புக் கட்​டளை​களை​யும் பக்​தர்​கள் பின்​பற்றி இந்த புனித​மான அமர்​நாத் யாத்​திரையை நிறைவு செய்ய வேண்​டும். இவ்​வாறு பிரதமர்​ மோடி கூறியுள்ளார்


Hindu Tamil 1 hour ago
Home Flash News