Select Location
All Locations
State
Region
City / District
ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் அறிவிப்பு

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

அடுத்த உத்தரவு வரும்வரை ஹோர்முஸ் நீரிணை பகுதி மூடப்படுவதாக ஈரான் அரசு தீடீரென அறிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் எந்த கப்பலுக்கும் அனுமதி கிடையாது என்ற ஈரானின் திடீர் அறிவிப்பால் பதற்றம் அதிகரித்துள்ளது. மேற்காசியாவில் அமெரிக்கா தனது தலையீட்டை நிறுத்திக் கொள்ளும்வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. அதாவது ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் தலையீடு இருக்கும் வரை எந்த கப்பலும் அதன் வழியாக செல்ல அனுமதி இல்லை என ஈரான் அறிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய முன்பிருந்த சூழல் திரும்பவில்லை. ஈரானின் திடீர் அறிவிப்பால் உலகளவில் மீண்டும் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது. போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக டிரம்ப் கூறிய நிலையில், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Smacy News 1 hour ago
Home Flash News