Select Location
All Locations
State
Region
City / District
மறுவெளியீடாகும் முதல்வர் விஜய்யின் திருப்பாச்சி!

மறுவெளியீடாகும் முதல்வர் விஜய்யின் திருப்பாச்சி!

முதல்வர் விஜய் நடித்த வெற்றிப்படங்களில் ஒன்றான திருப்பாச்சி திரைப்படம் விரைவில் மறுவெளியீடாக உள்ளது. சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பேரரசு இயக்கத்தில் முதல்வர் விஜய் நடிப்பில் உருவான திருப்பாச்சி திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.

திருப்பாச்சியிலிருந்து சென்னைக்குத் திருமணமாகிச் சென்ற தன் தங்கைக்கும் அவளது கணவருக்கும் ரௌடிகளால் பிரச்னை ஏற்பட, அதை தீர்க்கச் செல்லும் அண்ணனாக விஜய் நடித்திருந்தார். இப்படம் வெளியான போது, தமிழகம் முழுவதும் பெரிய வரவேற்பைப் பெற்றது. விஜய் நடித்த உணர்ப்பூர்வமான படங்களில் ஒன்றாக இன்றுவரை பார்க்கவும் படுகிறது.

இந்த நிலையில், திருப்பாச்சி திரைப்படம் விரைவில் மறுவெளியீடாக உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதனை, திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளனர்.


Dinamani 17 hours ago
Home Flash News