Select Location
All Locations
State
Region
City / District
மாணவர் போராட்டங்கள் எச்சரிக்கை மணி; நீட் முற்றிலுமாக தோல்வியடைந்துள்ளது

மாணவர் போராட்டங்கள் எச்சரிக்கை மணி; நீட் முற்றிலுமாக தோல்வியடைந்துள்ளது: ‘கோச்சிங் சென்டர்’ மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகம்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை: மாணவர் போராட்டங்கள் எச்சரிக்கை மணி, நீட் முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் தலையங்கத்தில் எழுதியிருப்பதாவது: நீட் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து வரலாறு காணாத வகையில் நாடு முழுவதும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள், வெறும் ஒரு தேர்வின் நம்பகத்தன்மை சீர்குலைந்ததற்கான எதிர்வினை மட்டுமல்ல. தகுதி அடிப்படையிலானது என முன்னிறுத்தப்பட்ட ஓர் அமைப்பின் மீதான ஆழமான நம்பிக்கையிழப்பையே அவை வெளிப்படுத்துகின்றன. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நடைமுறையின் நேர்மை மீதான நம்பிக்கை தகரும்போது, அது ஒரு நாட்டின் மனச்சாட்சியையே உலுக்குகிறது.

நீட்டுக்கு எதிராக முதன்முதலில் எச்சரிக்கைக் குரல் எழுப்பிய மாநிலம் தமிழ்நாடுதான். அதன் காரணம், நீட் தேர்வு நடத்தப்பட்ட விதத்தில் முறைகேடுகள் இருந்தன என்பதல்ல. மருத்துவம் படிக்க விரும்பும் ஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தையும் ஒரு தேசிய நுழைவுத் தேர்வில் பணயம் வைத்து தீர்மானிக்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையையே நாங்கள் கேள்விக்குட்படுத்தினோம். நடைமுறையில் பிரச்னை என்பதைவிட அதன் அடிப்படையே பிரச்னைக்குரியது. அண்மைய நிகழ்வுகள் எங்கள் கவலை முற்றிலும் நியாயமானது என்பதையே உறுதிப்படுத்தியுள்ளன. நீட்டை அறிமுகப்படுத்தியபோது, ஒன்றிய அரசு மூன்று முக்கிய வாக்குறுதிகளை அளித்தது. முதலாவதாக, பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய சுமையை அது குறைக்கும் என்று கூறப்பட்டது.

இரண்டாவதாக, மருத்துவச் சேர்க்கைகளில் நிலவி வந்த கேப்பிடேஷன் கட்டணம் மற்றும் வணிகமயமாக்கலை அது முற்றிலும் ஒழிக்கும் என உறுதியளிக்கப்பட்டது. மூன்றாவதாக, மிகத் தகுதியான மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதை உறுதிசெய்வதன் மூலம் மருத்துவக் கல்வித் தரம் உயரும், அதன் விளைவாக சிறந்த மருத்துவர்கள் உருவாவார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்த மூன்று வாக்குறுதிகளிலும் நீட் முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளது.Health சமத்துவமின்மையைக் குறைப்பதற்குப் பதிலாக, கற்றலின் மையத்தை பள்ளிக்கூடங்களிலிருந்து பயிற்சி மையங்களுக்கு நீட் மாற்றிவிட்டது. இன்று தகுதி என்பது தொடர்ச்சியான கல்விச் செயல்திறனின் அடிப்படையில் மதிப்பிடப்படுவதில்லை; பயிற்சி மையங்கள் கற்பிக்கும் தேர்வு எழுதும் உத்திகளை எவ்வளவு திறம்பட ஒரு மாணவர் கற்றுக்கொண்டுள்ளார் என்பதன் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது.


Dinakaran 1 hour ago
Home Flash News