Select Location
All Locations
State
Region
City / District
சீமை கருவேல மரங்கள் அகற்றம்: 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சீமை கருவேல மரங்கள் அகற்றம்: 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி கோரும் தன்னார்வ அமைப்புகளுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சீமை கருவேலம் மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜராகியிருந்த வைகோ, கருவேலம் மரங்களை அகற்ற அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவிப்பதால், பொதுமக்கள் பங்களிப்பு குறைவுகிறது. விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் சீமை கருவேலம் மரங்களை அகற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி கோரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்குக வேண்டும் என்று உத்தரவிட்டது. சீமை கருவேலம் மரங்களை அகற்றும் பணிகளை ஒருங்கிணைக்க நோடல் அதிகாரியாக வருவாய்த் துறை செயலரை நியமித்து ஐகோர்ட் ஆணையிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 90% கருவேலம் மரங்கள் அகற்றம், வட மாவட்டங்களில் சுணக்கம் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.


Dinakaran 1 hour ago
Home Flash News