Select Location
All Locations
State
Region
City / District
ரூ.63 ஆயிரம் கோடி வசூலை வாரிக் குவித்த திரைப்படம்

ரூ.63 ஆயிரம் கோடி வசூலை வாரிக் குவித்த ஹாலிவுட் திரைப்படம்!

Cinema News : உலகளவில் 63 ஆயிரம் கோடிகளை வசூலித்த திரைப்படம் குறித்த சுவாரஸ்ய தகவலை இங்கே பார்க்கலாம். Cinema News : பெரும்பான்மையான மக்களை ரசிக்க வைத்து உலகளவில் ரூ.63 ஆயிரம் கோடி வசூலை வாரிக் குவித்த படம் பற்றிய சுவாரஸ்ய தகவலை இங்கே விரிவாக பார்க்கலாம்.

இந்திய சினிமா ஆயிரம் கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருப்பதையே நாம் பெருமையாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் ஹாலிவுட் திரைப்படங்கள் எல்லாம் பத்தாயிரம் கோடி வசூலை எல்லாம் எப்போதோ தொட்டுவிட்டன. இதிலும் ஒரே தலைப்பைக் கொண்டு சீரிஸ் படம் ஒன்று உலகளவில் 63 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கிறது.

அந்த படம் எதுவென்றால் உலகளவில் இன்றளவும் மெகா ஹிட்டாக இருக்கும் ஹாரி பாட்டர் படங்கள் தான். ஹாரி பாட்டரின் 8 பாகங்களும் சேர்ந்து உலகம் முழுவதும் மொத்தம் தோராயமாக ரூ. 63,000 கோடி வசூலித்து உலக சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளன.

ஜேகே ரௌலிங்கின் நாவலை அடிப்படையாகக் கொண்டு 2001-ஆம் ஆண்டு வெளியான முதல் பாகமான 'Harry Potter and the Philosopher's Stone' உலகம் முழுவதும் ரூ. 8,364 கோடி வசூலித்து மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இத்தொடரின் இறுதி அத்தியாயம் இரண்டு பாகங்களாக வெளிவந்தது. 2010-இல் வெளியான 'Harry Potter and the Deathly Hallows – Part 1' திரைப்படம் ரூ. 8,011 கோடி வசூலித்தது. இறுதியாக, 2011-ஆம் ஆண்டு திரைக்கு வந்த நிறைவுப் பாகமான 'Harry Potter and the Deathly Hallows – Part 2' ஒட்டுமொத்த ஹாரி பாட்டர் தொடரிலேயே மிக அதிகமாக ரூ. 10,988 கோடி வசூலித்து வரலாற்றுச் சாதனை படைத்தது.

இந்த 8 பாகங்களின் கூட்டு வசூல் தான் இத்தொடரை உலக அளவில் ரூ. 63,000 கோடி வசூலித்த மிகப்பெரிய ஹாலிவுட் பிரான்சைஸ்களில் ஒன்றாக மாற்றியுள்ளது.


Zee News Tamil 1 hour ago
Home Flash News