“மாவீரனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்” - முதல்வர் விஜய் புகழாரம்!
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221வது நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் இன்று (03.08.2026) மரியாதை செலுத்தப்பட்டது. அதன்படி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கட்டிருந்த உருவப் படத்திற்கு அமைச்சர்கள் என். ஆனந்த், ராஜ்மோகன், குமார் மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதே போன்று, ஈரோடு மாவட்டம் ஓடாநிலை பகுதியில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு அமைச்சர் செங்கோட்டையன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவுகளின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடாத நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவுறுத்தலின் படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “28.07.2026 அன்று நடைபெற்ற 139வது கூட்டத்தில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு காவிரி படுகையின் நீரியல் - வானிலை சூழலை ஆய்வு செய்து, 29.07.2026 (காலை 8.00 மணி) முதல் அடுத்த 15 நாட்களுக்கு (29.07.2026 முதல் 12.08.2026 வரை) பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.