Select Location
All Locations
State
Region
City / District
ஈகோ இல்லாத ‘கூல்’ லீடர் ரஹானே: புஜாரா புகழாரம்

ஈகோ இல்லாத ‘கூல்’ லீடர் ரஹானே: புஜாரா புகழாரம்

‘அஜ்ஜு’ என்று இந்திய அணியில் செல்லமாக சக வீரர்களால் அழைக்கப்படும் அஜிங்கிய ரஹானே தனது அற்புதமான கிரிக்கெட் கரியரை முடித்துக் கொண்டு ஓய்வு அறிவித்து விட்டார்.

உண்மையிலேயே கிரேட் என்று சொல்வதற்கு அருகில் சென்று வந்தவர் ரஹானே. கோலி, பும்ரா, ஷமி, அஸ்வின் இல்லாத ஒரு அணியை அதுவும் ஆஸ்திரேலியாவில் 36 ஆல் அவுட்டுக்கு பிறகு வழிநடத்தி தொடரை வெல்வது என்றால் அது வெறும் அசாதாரணமானது மட்டுமல்ல, நினைத்துப் பார்க்கவே முடியாத சாதனையாகும்

இந்நிலையில், அவருடன் ஆடிய சக வீரரான புஜாரா, ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தளத்தில் எழுதிய பத்தியில் ரஹானேவை புகழ்ந்து பேசியுள்ளார்:

அஜிங்க்ய ரஹானேவின் கேப்டன்சி திறமையின் மிகப்பெரிய பலம் என்னவென்றால் அணியில் உள்ள அனைத்தையும் மிகவும் எளிமையாக கையாள்வதில்தான் இருந்தது. அணியில் யார் சிறந்த வீரர் என்ற அகந்தை அவரிடம் ஒருபோதும் இல்லை. ஒவ்வொரு வீரரிடமிருந்தும் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர்வதே அவரது ஒரே நோக்கமாக இருந்தது. அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் முக்கியமானவர்கள் என்ற நம்பிக்கையுடன், அனைவருக்கும் நம்பிக்கையையும் மனநிம்மதியையும் அளித்தார். அதே நேரத்தில், ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பில் அவர் எந்த சமரசமும் செய்யவில்லை. அந்த விஷயத்தில் அவர் ஒரு சிறந்த தலைவராகத் திகழ்ந்தார்.

ரஹானே எப்போதும் தனது செயல்பாடுகள் மூலமே வழிநடத்த விரும்பினார். அதே சமயம், ஒவ்வொரு வீரரின் கருத்துக்கும் மதிப்பளித்து, அவர்கள் இயல்பாக விளையாடும் சூழலை உருவாக்கினார். அணி சிறப்பாக செயல்பட்டு வந்ததால் தேவையற்ற மாற்றங்களை செய்ய முயற்சிக்கவில்லை. சில நேரங்களில் அதிகமாக பேசுவதைவிட அமைதியாக இருப்பதே அணிக்கு நல்லது என்பதை அவர் நன்றாக அறிந்திருந்தார்.

அப்போது ரஹானே என்னிடம், "அவர்களின் பேச்சால் பாதிக்கப்படாதே. நம் கூட்டணியில் மட்டும் கவனம் செலுத்துவோம். நம் பேட்டுகள்தான் பேச வேண்டும்," என்று அமைதியாக கூறினார். இறுதியில் அவர் சொன்னதுபோலவே நடந்தது. எங்கள் பேட்டிங்கே ஆஸ்திரேலியாவுக்கு சிறந்த பதிலாக அமைந்து, இந்தியாவின் தொடரை மாற்றிய வெற்றிக்கு அடித்தளமிட்டது.” என்று புஜாரா தெரிவித்துள்ளார்


Hindu Tamil 1 hour ago
Home Flash News